வியாழன், 21 ஏப்ரல், 2011

போட்டோஷாப் பாடம் -9 (Flip Horizontal Tool)

போட்டோஷாப் பாடம் -9 (Flip Horizontal Tool)


நீங்கள் மாற்ற வேண்டிய படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.அதை முறையே மார்க்யு டூலால் படம் முழுவதையும் தேர்வு செய்து அதை ப்ரி டிரான்ஸ்பார்ம் டூலால் தேர்வுசெய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட சாரளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Rotate 180 ஐ தேர்வு செய்யுங்கள். சென்ற பாடத்தில் கடைசியாக Free Transform Tool பார்த்தோம். அதில் உள்ள Scale,Rotate,Skew,Distort,Perspective,Wrap வரை பார்த்துள்ளோம். இனி அதில் அடுத்துள்ள பயன்பாடு பற்றி பார்க்கலாம்.






இப்போது நான் கீழ்கண்ட படத்தை எடுத்து கொண்டுள்ளேன்.




இப்போது இதில் Rotate 180 ஐ நான் தேர்வுசெய்ததும் உங்களுக்கு படம் ஆனது கீழ்கண்டவாறு மாறியிருக்கும்.




இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.





அதில் உள்ள Apply கிளிக் செய்யவும்.இந்த சமயத்தில் நீங்கள் தேர்வு செய்தபடம் நிரந்தரமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஆனால் இதே படத்தை நீங்கள் Save As மூலம் தேர்வுசெய்தால் மாற்றத்திற்கு உள்ளான படம் தனிபடமாக மாறிவிடும்.இதே போல் படங்களை 90 டிகிரி கோணத்தில் கடிகாரச்சுற்றில் மாற்றலாம்.





அதைப்போல் படத்தை மாற்றுகடிகாரச்சுற்று Rotate 90 CCW தேர்வு செய்தால் படமானது கீழ்கண்டவாறு மாறிவிடும்.






நீங்கள் புகைப்படங்கள் எடுக்கையில் சில புகைப்படங்களை புகைப்பட கோணத்திற்கு ஏற்ப கேமராவை திருப்பி படம் எடுப்பீர்கள். அதை நீங்கள் பார்க்கையில் அனைத்துப்படங்களும் படுக்கை வாசத்தில் இருக்க நீங்கள் கேமராவை திருப்பி எடுத்த படம் மட்டும் திரும்பி இருக்கும். அந்த மாதிரியான புகைப்படங்களை நீங்கள் இந்த டூல் கொண்டு சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். இதைநாம் போல்டரிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளலாம் என நீங்கள் சொல்வது கேட்கின்றது. போட்டோஷாப்பிலும் இந்த வசதி உள்ளது என தெரிவிக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இனி அடுத்துள்ள Flip Horizontal பற்றி பார்க்கலாம். முன்பே சொன்னவாறு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள். முறையே Free Transform Tool தேர்வு செய்து அதில் உள்ள Flip Horizontal தேர்வுசெய்யுங்கள்.





நான் கீழே உள்ள படத்தை தேர்வுசெய்து உள்ளேன்.





இப்போது இதில் நாம் Flip Horizontal தேர்வு செய்ய படம்மானது உங்களுக்கு இந்த மாதிரி மாறிவிடும்





இதைப்போல் நீங்கள் Flip Vertical Tool ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு படம் இந்தமாதிரி கிடைக்கும்




நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். alt



இதை எப்படி செய்வது என பார்க்கலாம். முன்பு பார்த்தமாதிரி படத்தை தேர்வுசெய்யுங்கள்.alt



இதை நாம் Flip Horizontal Tool மூலம் மாற்றியபின்alt




உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி உங்கள் கீ-போர்டில் உள்ள Enter தட்டுங்கள். இப்போது நீங்கள் போட்டோஷாப்பின் மேல் மெனுபாரில் உள்ள பைல்மெனுக்கு அடுத்துள்ள Edit கிளிக் செய்யுங்கள்.alt




இப்போது அதில் உள்ள Copy கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் பைல் மெனு செல்லுங்கள்alt




அதில் உள்ள New கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.alt


இப்போது இதில் உள்ள Name என்கின்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை கொடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து உள்ள Width அளவை இரண்டால் பெருக்கி பின் OK. கொடுங்கள். இப்போது உங்களுக்கு வெள்ளை பின்நிறத்துடன் ஒரு கட்டம் தோன்றும். இப்போது மீண்டும் Edit சென்று அதில் உள்ள Paste கிளிக் செய்யவும். alt

இப்போது நீங்கள் தேர்வு செய்த படம் வெள்ளை கட்டத்தில் பாதியில் வந்து இருக்கும்.இப்போது மீண்டும் முதலில் தேர்வு செய்த படத்தை கர்சர் மூலம் இழுத்துவந்து விடவும். இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைக்கும். alt

இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பாருங்கள்.
படம் சரியாக வரும்.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-8

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-8




சென்ற பாடம் 6-ல் மார்க்யு டூல் பற்றி பார்த்து வந்தோம் . அதில் கடைசியாக Free Transform Tool பார்த்து அதில் உள்ள Scale,Rotate, Skew, Distort, Perspective வரை பார்த்துள்ளோம்.
இனி அதில் அடுத்துள்ள Wrap பயன்பாடு பற்றி பார்ப்போம்.மற்ற டூலை விட இதில் என்ன விசேஷம்என்கிறீர்களா?
மற்ற டூல்கள் உங்களுக்கு படத்தை ஒரளவுக்குதான் மற்றதில் பொருத்த முடியும். ஆனால் இதில் எந்த வகை படமானாலும் அதை நம் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும்.தனியாக ஒருபடத்தை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.மேலும் இதில் ஒரு படத்துடன் மற்றும்ஒரு படத்தை நாம் அழகாக இணைத்து விடலாம். இனி அதை எப்படி உபயோகிப்பது என பார்ப்போம்.





நீங்கள் ஒரு படத்தை தேர்வு செய்து அதில் மார்க்யு டூலால் செல்க்ட் செய்தபின் முறையே ப்ரி டிரான்ஸ் பார்ம் டூலால் தேர்வு செய்துவிட்டிர்கள் . அடுத்து அதில் உள்ள wrap டூலை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி 9 கட்டங்கள் வருவதை காண்பிர்கள். அந்த கட்டங்களின் மைய புள்ளிகளை இழுப்பதுமூலம் உருவங்கள் நமது விருப்பபடி மாறும். நான் இப்போது இரண்டு படங்களில் இந்த டூலை உபயோகிப்பதை பற்றி பார்க்கலாம். ஒரு டீ கப்பில் அழகான படத்தை எப்படி கொண்டு வருவது என பார்க்கலாம். முதலில் நான் டீ கப் தேர்வு செய்து கொண்டேன்.






அது போல் இதில் வரகூடிய படமாக மகாபலிபுரம்


படத்தை தேர்வு செய்துகொண்டேன்.





இதை அப்படியே இந்த டீ-கப்பின் மீது பேஸ்ட் செய்து விடுங்கள். பின்னர் முன்னர் செய்தவாறு Free Transform Tool-Wrap தேர்வு செய்யுங்கள்.





உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இதில் உள்ள சதுரங்களின் முனையை பிடித்து மவுஸால் இழுக்க படம் நீங்கள் விரும்பியவாறு நகரும். உயரம்-அகலம்-நீளம் என நீங்கள் விரும்பியவாறு இதை மாற்றி இழுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய வடிவம் கிடைத்ததும் நீங்கள் இழுப்பதை விட்டுவிட்டு Enter தட்டுங்கள்.
உங்களுக்கு இந்த மாதிரி அழகான படம் கிடைக்கும்



நிறைய முறை முயற்சி செய்து பாருங்கள். பழக பழகதான் படம் மெருகேரும்.

புதன், 20 ஏப்ரல், 2011

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

இன்று மாடலுக்காக மகாபலிபுரம் கடற்கரை கோயிலை எடுத்துள்ளேன்.இதில் முதலில் மார்க்யூ டூலால் செல்க்ட் செய்யவும். பின் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும்.


அதில் Free Transform Tool செல்க்ட் செய்யுங்கள். Free Transform Tool -ல் நாம் அதனுடைய உப டூல்களை பயன்படுத்தாமல் படத்தை வேண்டிய பயன் பாட்டுகளுக்கு சுருக்கிக்கொள்ளலாம். இந்த படத்தில் Free Transform Tool மட்டும் பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள சதுரத்தில் கர்சரை தள்ள படமானது வலமிருந்து இடமாக சுருங்குவதை பாருங்கள்.








இந்தப்படத்தை பாருங்கள். இதில் நடுவில் உள்ள சதுரத்தில் கர்சரை வைத்து தள்ள படமானது வலப்புறம் இருந்து இடப்புறம் செல்வதைக்காணலாம்.



இதைப்போலவே படமானது கீழிருந்து மேல்நோக்கி செல்வதை பாருங்கள்.





இதைப்போலவே படங்களை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் மாற்றலாம்.





இந்த டூல்களின்பயன்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் போட்டோஷாப்பில் பணி புரிகையில் நமக்கு உபயோகப்படும். சரி பாடத்திற்கு வருவோம். நீங்கள் படத்தை தேர்வுசெய்து மார்க்யூ டூலால் செலக்ட் செய்தபின் உங்களுக்கு வழக்கபடி Transform Tool -ல் உள்ள அனைத்து டூல்களும் தெரியவரும் . அதில் சென்றவாரம் நாம் Scale Tool பற்றி பார்த்தோம். இனி அடுத்து உள்ள Rotate Tool பற்றி பார்ப்போம். இனி Scale Tool க்கு அடுத்துள்ள Rotate Tool செலக்ட் செய்யுங்கள்.





உங்களுக்கு முன்பு பார்த்தமாதிரி படத்தை சுற்றிலும் கோடுகளும் - சிறிய சதுரங்களும் கிடைக்கும். இப் போது கர்சரை அங்கு எடுததுச்சென்றால் கர்சரானது வளைந்த அம்புக்குறியுடன் தோன்றும். இனி நீங்கள் படத்தை உங்களுக்கு வேண்டிய அளவில் திருப்பிக் கொள்ளலாம்.(படமானது வண்டியின் ஸ்டேரிங் மாதிரி திருப்புவதை காணலாம்)




அடுத்து உள்ள Tool - Skew ஆகும். அதை யும் வழக்கபடி தேர்வுசெய்து கொள்ளுங்கள்.





Skew Tool ஆனது படங்களை விருப்பபடி சாய்துக் கொள்வதற்கு பயன் படுகின்றது. படத்தை பாருங்கள்.


இதில் மூலையில் உள்ள சதுரத்தை நீங்கள் கர்சரால் இழுக்கையில் கர்சரானது நீங்கள் படுக்கை வாட்டத்தில் இழுத்தால் படுக்கை வாட்டத்திலும் (Horizontal) ,உயர வாட்டத்தில் இழுத்தால் உயர வாட்டத்திலும் (Vertical) படம் நகரும். ஆனால் நீங்கள் இழுக்கும் சதுர மூலைமட்டுமே நகரும். மற்ற பக்கங்கள் நகராது.





இது படத்தை நான்கு மூலைகளிலும் இருந்து இழுத்து சிறப்பு தோற்றங்களை உருவாக்கலாம். கோட்டிற்கு வெளியில் செல்லும் போது படமானது விரிவாகவும் கோட்டிற்கு உள்செல்லும்போது படமானது சுருங்கியும் வரும்.





மூலையில் உள்ள சதுரத்தை நாம் கர்சரால் இழுக்க படமானது நம் இழுப்புக்கு ஏற்றவாறு வருவதை காணலாம்.





அடுத்து உள்ளது Prespective Tool. அதைப்பார்ப்போம்




இந்த டூலை பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள சதுரத்தை உள்புறம் இழுக்க படமானது நீங்கள் இழுக்கும் திசையில் சுருங்குவதை காணலாம். படமானது V-Shape -ல் உருவாவதை காணலாம்.





பக்கவாட்டில் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே





மேல்புறம் படத்தை சுருக்கினால் வரும் படம் மேலே...

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5


இன்று Free Transform பற்றி பார்ப்போம். போட்டோஷாப் டூல்களில் முக்கியமான டூல்களில் இதுவும் ஒன்று. இருப்பதை பெரியதாகவும் - பெரியதை சிறியதாகவும் இதன் மூலம் எளிதில் மாற்றலாம். அது போல் ஒரிடத்தில்இருந்து மற்ற இடத்திற்கு எளிதில் மாற்றவும் இந்த டூல் நமக்கு உதவும். முதலில் இதில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முதலில் ஒருபடத்தை தேர்வு செய்து அதை நகல் எடுத்து - ஒரிஜினலை வைத்துவிட்டு நகலை ஒப்பன் செய்யவும். பின் அதை மார்க்யூ டூலால் தேர்வு செய்யவும்

நான் தஞ்சை பெரிய கோயிலை தேர்வு செய்துள்ளேன். அதில் உள்ள சிவசிவ என்கிற பெயர்பலகையை மட்டும் மார்க்யூ டூலால் தேர்வு செய்துள்ளேன்.




பின் அதில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தேன்



உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Free Transform கிளிக் செய்யுங்கள். இப்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்த சிவசிவ என்கிற பெயர் பலகையை சுற்றி சிறுசிறு கட்டங்களும்-அதன் நான்கு மூலைகளில் சிறிய சதுரமும்- அதிலுள்ள இரண்டு சதுரங்களின் இடையே ஒரு சதுரமும் ஆக மொத்தம் உங்களுக்கு 8 சதுரங்கள் காட்சியளிக்கும். செய்து பாருங்கள். 8 சதுரங்கள் உங்களுக்கு வருகின்றதா? 8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறலாம். இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை மவுஸால் பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா? அதுபோல் அனைத்து சதுரங்களையும் ஒரே மாதிரி இழுங்கள்.




உங்களுக்கு சிவசிவ பெயர்பலகை எவ்வளவு பெரியதாக மாறிவருகிறது என பாருங்கள். அடுத்து வலப்புறம் கீழ் மூலையில் உள்ள சதுரத்தை அப்படியே இடப்புறம் உள்ள சதுரத்தின் மூலையை தாண்டி எடுத்துச்செல்லுங்கள். படமானது ஏற்கனவே உள்ளதிலிருந்து பிரிந்து இடப்புறம் இடம்மாறி வருவதை அறியலாம்.





இதைப்போலவே படத்தை கீழே இருந்து மேல் நோக்கியும்





மேலிருந்து கீழாகவும் நகர்த்தி வைக்கலாம்








அடுத்து Free Transform டூலில் உள்ள மற்ற உப டூல்களை பார்ப்போம். மார்க்யூ டூலால் படத்தை தேர்வு செய்து பின் கர்சர் வைத்து கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





அதில் முதலாக உள்ளது Scale ஆகும். இதை நீங்கள் தேர்வு செய்ததும் உங்களுக்கு File,.Edit ,Image போன்ற கட்டளை டூல்கள் உள்ள Menu Bar கீழ் Option Bar பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தெரிய வரும்.




இதில் X - AXIS, Y-AXIS, W-WIDTH %, H-HIGHT % ,






இதில் மேலே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். width % மாற்றியபின் கீழே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள..





அடுத்து கோணம்(Angle). இதில் உள்ள கோணத்தை மாற்றம் செய்வதின் மூலம் படத்தை நமக்கு தேவையான கோணத்தில் மாற்றிக்கொள்ளலாம். கோணங்களிலும் Horizontal Degree, Vertical Degree நமக்கு தேவையானதை அமைத்துக்கொள்ளலாம். சரியான அளவுகளில் படம் அமைக்க இந்த Scale உபயோகிக்கலாம். ஆனால் நமக்கு கண் பார்க்க -மவுஸால் தேர்வு செய்வதுதான் சுலபமாக இருக்கும். அதில் நாம் நிபுணராக மாற்றியபின் Scale அளவுபடி படத்தை அமைக்கலாம். Scale மூலம் படத்தை மாற்றாமல் மவுஸாலேயே படத்தை மாற்றுவது என அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4

போட்டோஷாப்பில் ஒருபடம் நாம் மாறுதல்செய்வதற்கு முன் அதை பிரதி DUBLICATE எடுத்துவைக்க சொல்லியிருந்தேன். நண்பர் ஒருவர் DUPLICATE எப்படி எடுப்பது என கேட்டிருந்தார்.


அதனால் DUPLICATE எப்படி எடுப்பது என முதலில் பார்ப்போம். உங்களுக்கு தேவையான படத்தை முதலில் திறந்துகொள்ளுங்கள். நான் இந்த பிரம்மா படத்தை தேர்வு செய்து திறந்துள்ளேன்





இப்போது மேல் புறம் பார்த்தால் உங்களுக்கு FILE,EDIT,IMMAGE,LAYER,SELECT... என வரிசையாக இருப்பதில் IMMAGE –ஐ தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு வரிசையாக
கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.




அதில் Dublicate என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு படத்தின் மீது கீழ்கண்டவாறு
ஒரு விண்டோ திறக்கும்




அதில் உங்களுடைய புகைப்படத்தின் பெயரோ – அல்லது புகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது நீங்கள் விரும்பும் பெயரையும் அதில் தட்டச்சு செய்யலாம். அடுத்து OK கொடுங்கள்.உங்களுக்கு இந்த மாதிரி படம் இரண்டு தோன்றும்.alt

இதில் ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தை மூடிவைத்துவிட்டு காப்பி யில்( நிஜத்தின் நிழலில்) என்னவேண்டுமானாலும் செய்யலாம். மாற்றங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அதை சேமியுங்கள். பிடிக்கவில்லையென்றால் அதை கான்செல்(cancel) செய்துவிட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒரு படத்தை பிரதி(Dublicate) எடுத்துக்கொள்ளுங்கள். பிரதி எடுப்பதில் நன்கு பயிற்சிபெற நான்கு –ஐந்துமுறை முயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரும். இனி பாடத்திற்கு வருவோம். சென்ற பதிவுகளில் மார்க்யூ டூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள பிற வசதிகளையும் இப்போது பார்ப்போம். இதில் முன்வகுப்புகளில் Deselect,Select Inverse, Feather... பற்றி பார்த்தோம். இதில் அடுத்துஉள்ளது Save Selection..இதன் உபயோகம் நமக்கு இப்போது தேவைபடாது . அதனால் அதை பின்பு பார்ப்போம். அடுத்து உள்ளது Make Work Path. இதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் மார்க்யூ டூலால் தேர்வுசெய்த பகுதியில் கர்சரைவைத்து கிளிக் செய்தால் வரும் பகுதியில் Make Work Path செலக்ட்செய்யவும்.alt

இதில் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் டாலரன்ஸ் 5 என வைத்து ஓகே கொடுக்கவும்.



நான் கீழ்கண்ட படத்தில் அதை தேர்வு செய்துள்ளேன். இது படத்தை சுற்றி ஒரு கேர்டு போட்டவாறு நமக்கு படம் கிடைக்கும். கும்பலாக உள்ள நபர்களின் படங்களில் நமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு, கட்டம் கட்டி காண்பிக்க இது பயன்படுகிறது. பிரபல மானவர்களின் கும்பலாக உள்ள புகைப்படத்தில் அவரைமட்டும் காண்பிக்க வட்டம் - கட்டம் கட்டி யுள்ளதை பார்த்திரு்ப்பீர்கள். அதை இதன் மூலம் செய்யலாம். alt

அடுத்து நாம் பார்ப்பது லேயர் வழி காப்பி. சரி லேயர் என்றால் என்ன? போட்டோஷாப்பின் உயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி பின்னர்வரும் பாடங்களில் விரிவாக பார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது? மிகவும் சுலபம். உங்கள்கீ-போர்டில் F7 கீயை ஒரு முறை அழுத்துங்கள் . உங்களுக்குக்கான லேயர்ஒன்று திறந்திருப்பதை பார்க்கலாம்.




சரி பாடத்திற்கு வருவோம். மார்க்யூ டூலால் தேர்வு செய்து வரும் விண்டோவில் அடுத்து வருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்






நீங்கள் தேர்வு செய்த படம் ஆனது லேயரில் சென்று அமர்ந்துகொள்ளும். படத்தை பாருங்கள்





அடுத்து உள்ளது New Layer. ,இதை கிளிக் செய்தால் உங்களுக்கு புதிய லேயர் ஒன்று உருவாகும்.





அதில் உள்ள New Layer கிளிக் செய்யவும்.



உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் . அதில் மாற்றம் ஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும். புதிய லேயர் ஒன்று உருவாகியுள்ளதை பார்ப்பீர்கள்.





லேயர்பற்றிய பாடத்தில் இதைபற்றி விரிவாக பார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில் Free Transform பற்றி பார்க்கலாம்.