வியாழன், 5 மே, 2011

போட்டோஷாப்-14 Pattern Images

போட்டோஷாப்-14 Pattern Images



இன்றைய பாடத்தில் Pattern image பற்றி பார்க்கலாம். Pattern image ஆனது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை – குறிப்பிட்ட நபரை தேர்வு செய்து அதை அதிக எண்ணி்க்கையில் சுலபமாக நிரப்ப நமக்கு உதவுகின்றது.
அதற்கு நாம் மானையும் மயிலையும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் மான் படத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.




இதன் image அளவு அகலத்தில் 6.667 மற்றும் உயரத்தில் 8.889 அங்குலத்தில் உள்ளது.





இதில் அதன் முகம் மட்டும் நான் தேர்வு செய்துள்ளேன்.





முன்பே பாடத்தில் சொன்னது போல் மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள். பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த மானை பேஸ்ட் செய்யுங்கள்.





உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி பழைய படத்தை முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில் தலை மட்டும் உள்ள மான கிடைக்கும். அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம் உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.





இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.






அதில் உள்ள Define Pattern கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின் படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள். நான் அகலத்தில் 10 அங்குலமும் உயரத்தில் 12 அங்குலமும் வைத்து புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன். இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில் Pattern தேர்வு செய்து பின் Custom Pattern எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த மானின் படம் முதலில் இருக்கும். அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே. கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில் என்ன நடக்கின்றது என பாருங்கள்.





ஒரு மான் பாருங்கள் - 20 மானாக வந்து விட்டது. இதைப்போல்

இந்த மயிலை பாருங்கள்.






மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.





இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.





வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை குறைத்துள்ளேன். படம் கீழே.





இதையும் Edit -Define Pattern -O.K. கொடுத்தேன். புதிய விண்டோ ஓப்பன் செய்தேன். அதில் மானை நிரப்பியவாறு மயிலையும் நிரப்பினேன். படத்தை பாருங்கள்.

போட்டோஷாப் பாடம்- 13 (Stroke Tool)

போட்டோஷாப் பாடம்- 13 (Stroke Tool)


போட்டோஷாப்பில் இன்று Storke பற்றி பார்க்கலாம். ஒரு படத்தினை

சுற்றி அழகான கலரில் பார்டர் இதில் செய்யலாம். அதைப்பற்றி இன்றைய
பாடத்தில் காணலாம்.முதலில் இந்த ரோஜாப் பூவினை எடுத்து உள்ளேன்




இப்போது இந்த பூவினை சுற்றி மார்க்யு டூலால் செவ்வகம் வரைந்துள்ளேன்.
படத்தினை பாருங்கள்




இப்போது நீங்கள் மவுஸில் ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள
Feather உங்களுக்கு தேவையான Radius வைத்துக்கொள்ளுங்கள்.
ஓ.கே. கொடுங்கள்





வழக்கப்படி Ctrl+C - Ctrl+N-Enter -Ctrl+V செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இப்போது பூவினை சுற்றி மார்க்யு டூலால் ஓரத்தில் செவ்வகம்
வரையுங்கள். அடுத்து Edit -கிளிக் செய்து அதில் உள்ள Stroke
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்


இதில் Width உங்களுக்கு எந்த பிக்ஸல் அளவிற்கு வேண்டுமோ
அதை தட்டச்சு செய்யுங்கள்.அதன் கீழே உள்ள கலர் பாக்ஸில்
நீங்கள் கிளிக் செய்ய உங்களுக்கு கலர் பிக்கர் -Color Picker -வரும்.
உங்களுக்கு தேவையான நிறத்தினை தேர்ந்தெடுங்கள். நான் சிகப்பு
கலரினை தேர்வு செய்துள்ளேன்.
அடுத்துள்ளது நீங்கள் தேர்வு செய்த கட்டத்திற்கு உள்புறம் - நடுவில்-
வெளிப்புறம் - இதில் எங்கு கலர் கோடு வரவேண்டுமோ -inside-
center-out side -இதில் எது வேண்டுமோ அதை

தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள படத்தினை பாருஙகள்




இப்போது சிகப்பு கலரின் முன் அதைப்போல் மார்க்யு டூலால்
செவ்வகம் வரையுங்கள். முன்பு போல் செய்யுங்கள்



நான் பச்சை கலரை கொடுத்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.






தனியே பார்டர் போடுவது பார்த்தோம். ஆனால் படத்தை சுற்றியே
கோடு வருவது பற்றி பார்க்கலாம். நான் திரிஷா அவர்களின் படத்தை
எடுத்துக்கொண்டுள்ளேன்








பென்டூல் மூலம் அவரை சுற்றி கட் செய்தேன். படத்தை தனியே
காப்பி செய்தேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.








இப்போது முன்பு சொல்லிகொடுத்தது மாதிரியே செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்.





இப்போது அடுத்துள்ள படத்தினை பாருங்கள். பச்சை நிறத்தினை
அடுத்து மஞ்சள் நிறம் தேர்வு செய்துள்ளேன்.





அடுத்துள்ள படத்தினை பாருங்கள். சிகப்பு நிறம் தேர்வு செய்து
உள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.

போட்டோஷாப் பாடம்-12(Pen Tool)

போட்டோஷாப் பாடம்-12(Pen Tool)


டூல்கள் வரிசையில் 17 வதாக உள்ள டூல்தான் பென்டூல். பேனாவின் நிப் மாதிரி உங்களுக்கு இந்த டூல் தோன்றமளிக்கும்.
இதை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.




இப்போது மேல்புறம் உள்ள OptionBar –ல் பார்த்தீரகளேயானால் முதலில் பென்டூலும் அடுத்து கட்டத்தில் முதலில் ஒரு சதுரமும் இருக்கும் .அதை விட்டுவிடுங்கள். அடுத்த சதுரம் அருகே கர்சர் கொண்டு செல்லுங்கள். அடுத்த டூல் Paths என காண்பிக்கும்.





அதை கிளிக் செய்யுங்கள். இனி படத்தை எப்படி கட் செய்வது என பார்க்கலாம். உங்கள் கணிணியில் சேமித்துவைத்துள்ள ஒரு படத்தை திறந்து கொள்ளுங்கள்





நான் இந்த படத்தில் நடுவில் இருப்பவரைமட்டும் தனியே பிரித்துஎடுக்க போகின்றேன்.

அதை எப்படி என பார்க்கலாம்.

நீங்கள் பென் டூல் செலக்ட் செய்ததும் உங்கள் கர்சரை அந்த படத்தின் அருகே கொண்டு செல்லுங்கள். உங்கள் கர்சரானது பேனாவின் நிப்பாக மாறிவிடும். இப்போது பேனாவை படத்தின் கீழ் பகுதியில் கிளிக் செய்யவும். இப்போது படத்தில் ஒரு சின்ன சதுரம் உருவாகியிருப்பதை பாருங்கள்.அடுத்து கொஞ்சம் தள்ளி மற்றும் ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போது மற்றும் ஒரு சதுரம் உருவாகி இரண்டு சதுரங்களும் ஒரு சிறுகோட்டால் இணைவதை காணலாம்




மேலே உள்ள படத்தை பாருங்கள். நான் முழங்கைவரை கட் செய்துள்ளது தெரியும்.இங்கு ஒரு சின்ன ஆலோசனை. நாம் பேப்பரில் உள்ள ஒரு படத்தை கத்தரிக்கோலால் கட் செய்யும்போது என்ன செய்கின்றோம். வேகமாக கட்செய்யும் போது ஒரு அங்குலத்திற்கு படம் கட் டாகும். மெதுவாக கட் செய்யும் போது ஒவ்வொரு சென்டிமீட்டராக படம் கட்டாகும். மெதுவாக கட்செய்யும் படம் அழகாக இருக்கும். வேகமாக கட்செய்யும் படம் ஒரங்கள் தாறுமாறாக இருக்கும். அதுபொல்தான் இங்கும் நீங்கள் பென்டூலால் கட்செய்யும் போது இடைவெளி குறைவாக வைத்து புள்ளிகள் வைத்துச்செல்லவும். புள்ளிகளுக்கிடையே இடைவெளி அதிகமானால் படங்களின் ஓரத்தில் உங்களுக்கு பினிஷிங் இருக்காது. நான் நடுவில் இருக்கும் படத்தை கீழே இருந்து கட் செய்ய ஆரம்பித்து அவர் உருவத்தின் அவுட்லைன் முழுவதும் கட்செய்தபின் ஆரம்பித்த புள்ளியையும் முடித்த புள்ளியையும் இணையுங்கள். இப்போது நீங்கள் தேர்வுசெய்தபடம் அவுட்லைன் முழுவதும் தேர்வாகிவிட்டது. அடுத்து நீங்கள் கட்செய்த படத்தின்மீது கர்சரைவைத்து கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





அதில் நான்காவது லைன் பாருங்கள். Make Selection இருக்கின்றதா. அதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





அதில் உள்ள Feather Radius எதிரில் உள்ள கட்டத்தில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவினை கொடுங்கள். Feather பற்றி நான் ஏற்கனவே விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இங்கு நான் குறைந்த அள வே கொடுத்து்ள்ளேன். இப்போது ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி சீரியல் லைட் போட்டவாறு சிறு சிறு கோடுகள் சுற்றி வருவதை பார்க்கலாம். இதுவரை உங்களுக்கு சரியாக வந்தால் நீங்கள் பாடத்தை சரியாக பின் தொடர்ந்து வருகின்றீர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது பைல் மெனு சென்று நீயு கிளிக் செயயுங்கள்.

உங்களுக்கு அளவுகளுடன் ஒரு காலம் உண்டாகும். அதில் நீங்கள் நீளம் - அகலம் - ரெசுலேஷன் தேர்வு செய்யுங்கள். ரெசுலேஷன் ஒரே அளவாக இருந்தால்தான் படம் அழகாக இருக்கும். ஒகே கொடுங்கள். இப்போது உங்களுக்கு படங்கள் இல்லாமல் வெள்ளைநிற விண்டோ ஒப்பன் ஆகி இருக்கும். இனி நீங்கள் கட்செய்தபடத்திற்கு வாருங்கள். படத்தின் மீது கிளிக்செய்து மூவ்டூல் செலக்ட் செய்யுங்கள். இப்போது படத்தின் அருகே கர்சர் கொண்டு செல்லும்சமயம் கர்சரானது கத்திரி்க்கோலாக மாறுவதை காணலாம். இனி கர்சரை மெதுவாக நகர்த்துங்கள். நீங்கள் கட்செய்த படம்மட்டும் நகர்வதை காணலாம்.




நீங்கள் படத்தை நகர்த்திகொண்டுவந்து நீங்கள் புதிதாக திறந்த விண்டோவில் விட்டு விடவும். இப்போது பார்ததீரு்களேயானால் நீங்கள் கட்செய்தபடம் புதிய விண்டோவிலும் இருக்கும். பழைய படத்திலும் இருக்கும்.




படத்தை மூன்றுமுறை நகர்த்தி வைத்துள்ளேன்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.





இதேபோல் நாம் எந்தனை முறை வேண்டுமானாலும்


வரிசையாக வைத்துக்கொள்ளலாம்.

புதன், 4 மே, 2011

போட்டோஷாப்-11 Duplicate,Image Size,Canvas Size,File info

போட்டோஷாப்-11 Duplicate,Image Size,Canvas Size,File info


போட்டோஷாப்பில் இன்று Duplicate,Image Size,Canvas Size,File info மற்றும் Page Setup பற்றி பார்க்கலாம். அதில் நாம் மெனுபார் சென்று அங்கு Image -ல் Duplicate,Image Size,Canvas Size உபயோகிப்பதை பற்றி பார்த்தோம். ஆனால் அங்கு செல்லாமலே நாம் சுலபமாக
மற்றும் ஓரு வழியில் மேற்கண்ட கட்டளைகளை செய்வதை இங்கு பார்க்கலாம்.

முதலில் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.நான் ஐஸ்வர்யா ராய் அவர்களின் படத்தை எடுத்துள்ளேன். அதில் படத்தின் மேல்புறம் உள்ள புளு பட்டையின் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.






அதில் உள்ள Duplicate கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோக்கள் இரண்டு தோன்றுவதை பாருங்கள்.




அடுத்துள்ளது Image Size தேர்வு செய்யுங்கள்.





உங்களுக்கு தேவையான அளவினை இங்கு தேர்ந்தேடுத்துக் கொள்ளுங்கள். ஓகே கொடுத்தால் நீங்கள் விரும்பிய அளவினை பெறலாம்.




அடுத்துள்ளது Canvas Size. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.





இதனை தேர்வு செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





உங்கள் படத்தின் அளவினை Current Size-ல் பார்க்கலாம்.
New Size-ல்நமக்கு வேண்டிய அளவினை கொடுத்துப்
பெறலாம்.இதில் Anchorபார்த்தால் அதில் ஓன்பது
கட்டங்கள் இருக்கும்.சுற்றிலும் அம்புக்குறியும்நடுவில்
வெண்மை நிறமும் இருக்கும்.உங்கள் கர்சரை எந்த
அம்புக்குறியில் நீ்ங்கள் கிளிக் செய்கின்றீர்களோ
அந்த இடம்வெள்ளை நிறத்தையும் அநத இடத்தை
சுற்றி அம்புக்குறிஅமைவதையும்காணலாம்.

இப்போது உங்களுக்கு தேவையான அளவினை நீயு
சைஸ்ஸில்நீள -அகலத்துடன் குறிப்பிடுங்கள்.
(உங்கள் படத்தினை ஓன்பது பாகங்களாக
பிரித்து அதில் எந்த இடம் உங்களுக்கு வேண்டுமோ
அந்த இடத்தைநீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்)
நான் இந்த படத்தில் ஐஸ்வர்யாஅவர்களின் கண்களை
தேர்வு செய்வதற்காக (ஐஸ் அவர்களின் ஐஸ்)
அகலம் 5 அங்குலம் உயரம் 1.5 அங்குலமும் வைத்துள்ளேன்.
கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.





ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டொ தோன்றும்.
Proceed கொடுங்கள். கீழே தோன்றும் படத்தை பாருங்கள்.





ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ தோன்றும்.






இதைப்போல் உங்களுக்கு தேவையான இடத்தை தேர்வு
செய்யுங்கள்.இந்த கட்டளையை நாம் Crop Tool மூலமும்
செய்யலாம்.அதைபின் வரும் பாடங்களில் பார்க்கலாம்.
கடைசியாக உள்ளது Page Setup. அதை தேர்வு செய்யுங்கள்





உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள்
பேப்பரின் அளவினையும் போட்டோவானது நீளவாக்கிலா அல்லது
அகலவாக்கினில் தேவையா என்பதையும் தேர்வு செய்யுங்கள்.





இதில் உள்ள பிரிண்டரை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.




உங்கள் பிரிண்டர் பெயரையும் அளவினை செட் செய்து ஓகே கொடுங்கள்.பிரிண்டர் இணைப்பு கொடுத்திருந்தால் உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்தபடம் ஆனது பிரிண்ட் ஆகும். இதே கட்டளையை நாம் மெனுபாரில் உள்ளபைல் மூலமும் நிறைவேற்றலாம். அதனையும் நாம் பின் வரும் பாடங்களில்பார்க்கலாம்.